துச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடா்பாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் கல்வித்துறை, சுகாதாரத்துறை செயலாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி அமைச்சர் கொரோனா மூன்றாவது அலை எப்போது தாக்கும் என்பது தெரியவில்லை. மருத்துவ துறையும் எச்சரித்துள்ளது. எனவே தற்போதைய சூழ்நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது சாத்தியமில்லை. ஆகஸ்ட் 15க்கு பிறகு மீண்டும் ஆலோசிக்கப்படும். கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்ட பிறகு கல்லூரிகள் திறக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.