அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதலாக 400 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! - நாள்: 04.02.2021.
அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2019-20ம் கல்வியாண்டில் மாணவர்களின் சாண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. 11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தேவை ஏற்படுவதால் மாணவர்களின் கல்வி நலனை கருத்திற்கொண்டு இணைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு 400 கூடுதல் பணியிடங்கள் தேவையுள்ள பள்ளிகளுக்கு அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.
புதியதாக மேற்படி பள்ளிக்கு அனுமதிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களை சார்ந்த பாளியின் அளவுகோல் பதிவேட்டில் ( Scale Register ) பதிவுகள் மேற்கொண்டு பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தப்படுகிறது.