மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில்(எல்கேஜி அல்லது முதல் வகுப்பு) அதாவது பள்ளி எந்த வகுப்பில் ஆரம்பிக்கிறதோ அந்த வகுப்பில் சேர்க்கைக்கான நடைமுறைகள் கடந்த மாதம் 24ம் தேதியில் தொடங்கியுள்ளது. மேற்கண்ட இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்க்க விரும்புவோர் ஜூலை 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆகஸ்ட் 3ம் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இணைய தளத்தில் ீ்தகவல் வெளியிடப்படும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விடக் கூடுதலாக விண்ணப்பங்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆகஸ்ட் 10ம் தேதி குலுக்கல் நடத்தி சேர்க்கப்பட உள்ள குழந்தைகள் தெரிவு செய்யப்படுவார்கள்.
No comments:
Post a Comment