தமிழக பள்ளிக் கல்வித்துறையில் புதிய நடைமுறைகள் – ஆணையர் சுற்றறிக்கை - Asiriyar.Net

Wednesday, July 7, 2021

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் புதிய நடைமுறைகள் – ஆணையர் சுற்றறிக்கை

 




தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், மாணவர்களின் கல்விக்கென புதிய திட்டங்களை வகுத்து அவற்றை அனைத்து பள்ளிகளிலும் பின்பற்றுமாறு பள்ளிக்கல்வி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். 



பள்ளிகள் திறப்பு:


கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து, தமிழகத்தில் மூடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், கொரோனா 3 ஆம் அலைக்கான அறிகுறிகள் இருப்பதால் தேவையான ஆலோசனைகளை மேற்கொண்ட பிறகு, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சில வழிமுறைகளை குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 


இந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், நலத்திட்டங்கள் உள்ளிட்ட தகவல்களை, கல்வியியல் மேலாண்மை தகவல் முகமை (EMIS) யின் இணையதளம் வழியாக கையாளப்பட வேண்டும். அதாவது, அரசு பள்ளி மாணவர்கள் எந்தவொரு நேரத்திலும் பாடங்களை கற்றுக்கொள்ளும் படி, TN-DIKSHA என்ற டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பாடப்புத்தகங்களை பெறுதல், கற்பித்தல் தகவல்கள், அரசு பள்ளிகளை மேம்படுத்த தேவையான பங்களிப்புகள், பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம், ஆசிரியர்களுக்கான பேஸ்புக் ஒர்க்பிளேஸ், கற்றல் மற்றும் கற்பித்தல் போன்ற வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளன. 


அதனால் அரசு அறிவுரையின் படி, EMIS இணையதளத்தை அனைத்து மாவட்ட கல்வித்துறைகளும் புதுப்பிக்க வேண்டும். வரும் நாட்களில் பள்ளிகள் குறித்த ஏதேனும் புகார்கள், தகவல்கள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் நேரடி விவரங்கள் கோருவதை தவிர்த்து அவற்றை EMIS இணையதளத்தில் தெரிவிக்கலாம். மேலும் துறை சார்ந்த வழிமுறைகளை பின்பற்றி பள்ளிக்கல்வியின் முதன்மை, மாவட்ட மற்றும் வட்டாரக்கல்வி அதிகாரிகள் செயல்பட வேண்டும். அது போல நடப்பு 2021-22 கல்வியாண்டில், 1 முதல் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 2 ஆம் பருவ பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான தரவுகளை அனுப்பி வைக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



Post Top Ad