பாடத்திட்டத்திலும் ஒன்றிய அரசு என அச்சிடப்படும் - லியோனி - Asiriyar.Net

Thursday, July 8, 2021

பாடத்திட்டத்திலும் ஒன்றிய அரசு என அச்சிடப்படும் - லியோனி

 




பாடத்திட்டத்திலும் மத்திய அரசு என்ற வார்த்தை மாற்றம் செய்யப்பட்டு ஒன்றிய அரசு என அச்சிடப்படும் என பாடநூல் நிறுவனத்தில் தலைவராக பொறுப்பேற்றுள்ள திண்டுக்கல் ஐ. லியோனி தெரிவித்தார்.


தமிழக அரசின் பாடத்திட்டத்திலும் மத்திய அரசு என்ற வார்த்தை மாற்றப்பட்டு ஒன்றிய அரசு என அச்சிடப்படும் என திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக லியோனி நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து திண்டுக்கல் லியோனி வாழ்த்து பெற்றார்..


அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த பதவி வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், மாணவர்கள் கல்வியை சுமையாக நினைக்காமல், மகிழ்ச்சியாக படிக்கும் வகையில் நூல்களை மாற்ற வேண்டும் என்றும் கூறினார்.


மேலும், சமசீர் கல்வியை முன் உதாரணமாக வைத்து பாட நூல்களை தயாரிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பாடத்திட்டத்திலும் மத்திய அரசு என்ற வார்த்தை மாற்றப்பட்டு இனி வரும் காலங்களிக் ஒன்றிய அரசு என அச்சிடப்படும் எனவும் திட்டவட்டமாக கூறினார்.



No comments:

Post a Comment

Post Top Ad