எடப்பாடி அருகே 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் தோல்வி அடைந்த மாணவர், போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாகக் கூறிய நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட வெள்ளநாயக்கன் பாளைம், இப்பகுதியை சேர்ந்த ரத்தினவேல் விவசாயக்கூலித்தொழிலாளியான இவரது மகன் மனோஜ்குமார்(18), அரசு பள்ளியில் கல்வி பயின்று வந்த இம்மாணவர், கடந்த 2019 ஆம் கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தொல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவர் மனோஜ்குமார், தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதியுள்ளார். இதில் ஆங்கில படப்பிரிவில் 31 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் மீண்டும் மனோஜ்குமார் தேர்ச்சி பெறாமல் போனதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து இணையதளத்தில் தனது தற்காலிக மதிப்பெண் பட்டியிலை பதிவிறக்கம் செய்த மனோஜ்குமார், அதில் இருந்த 31 மதிப்பெண்னை கனிணி மூலம், 35 ஆக திருத்தம் செய்ததுடன், ஆங்கிலத்தில் F என்று இருந்த எழுத்தினை P என்று திருத்தம் செய்து, அதனை எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமர்பித்து பதினோராம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று பொதுமுடக்கத்தால் பள்ளிகள் வழக்கம்போல் இயங்காத நிலையில், அனைவரும் தேர்ச்சி எண்ற அரசு உத்தரவின்படி 11ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மாணவர் மனோஜ்குமார், இதே முறையில் 12ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாணவரின் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்ட நிலையில், அவரது 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் ஆங்கிலப்பாடத்தின் மதிப்பெண் எண்ணால் 35 எனவும், எழுத்தால் முப்பத்தி ஒன்று என இருப்பதை கண்டறிந்த அலுவலர்கள், அதுகுறித்து விசாரனை மேற்கொண்டனர்.
இதில் சமந்தப்பட்ட மாணவர், தனது 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை போலியாக திருத்தம் செய்து, 11ஆம் வகுப்பில் சேர்ந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரனை மேற்கொண்ட எடப்பாடி கல்வி மாவட்ட அலுவலர் விஜயா, சமந்தப்பட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உயர் அலுவலர்களுக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளார்.
சமந்தப்பட்ட மாணவர் போலி மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்திட உதியவர்கள் குறித்த விவரம் மற்றும் இது போன்று வேறு மாணவர்கள் யாரேனும் 11ஆம் வகுப்பு சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனரா? போன்ற விவரங்கள் உரிய விசாரனைக்கு பின் தெரியவரும் என சமந்தப்பட்ட கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment