தமிழகத்தில் தரமற்ற மற்றும் போலி கிருமிநாசினி தயாரித்து விற்ற 82 நிறுவனங்களிடம் மருந்து கட்டுப்பாடு இயக்ககம் விசாரணை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் கரோனா வேகமாக பரவி வரும் நிலையில், கரோனா வராமல் தவிர்க்க கிருமிநாசினி முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், தரமற்ற மற்றும் போலியான கிருமிநாசினிகளை தயாரித்து சந்தைகளில் விற்றதாக 82 நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இயக்ககம் சார்பில் முதல்கட்டமாக 32 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும், 82 நிறுவனங்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment