பணம் செலுத்த வேண்டிய இடங்கள் தவிர வேறு எங்கேயும் க்யூஆர் கோட் ஸ்கேன் செய்யாதீர்கள்,’ என்று ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று அதிகரித்து இருப்பதால், ஆன்லைன் வர்த்தகம் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கடந்த காலங்களை காட்டிலும் தற்போது அதிகரித்துள்ளது. இதுபோன்ற இக்கட்டான கால கட்டத்திலும் சில கும்பல்கள் மக்களிடம் பண மோசடியில் ஈடுபடுவதற்கு முயற்சிப்பதாக ஸ்டேட் வங்கி எச்சரித்துள்ளது.
எனவே, வாடிக்கையாளர்கள் மிகுந்த கவனமுடன் இருக்கும்படி ஸ்டேட் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. பணம் செலுத்துவதற்கு தவிர வேறு எதற்காகவும் க்யூஆர் கோடை பயன்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களை அது எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment