ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி
ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி கொரோனா தொற்றுகாரணமாக மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாட்டை சரிசெய்ய பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன மாணவர்களிடம் உளவியல் ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை சரி செய்யவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது அதன்படி உளவியல் நிபுணர்கள் மூலம் குழந்தைகள் மனநலம் தொடர்பான பயிற்சியை அவர்களுக்கு அளிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையில் குழந்தைகளின் மனநலம் தொடர்பான பயிற்சி பெற்று இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் விபரங்கள் துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பட்டியலில் இடம் பெறும் ஆசிரியருக்கு இணைய வழியில் கூடுதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் இவர்கள் மூலம் இதர ஆசிரியர்களுக்கு பயிற்சி தரவும் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment