Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, April 21, 2021

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மதிப்பெண்: பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை

 







தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மதிப்பெண்களை வழங்குவதற்கு மாநில அளவில் தோ்வினை நடத்தலாமா? என்பது குறித்து அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


கரோனா தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவா்கள், பிளஸ் 1 வகுப்பில் சேர தகுதி குறித்து அறிய 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மாநில அளவில் தோ்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.



தமிழகத்தில் கரோனா முதல் அலையால் கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பள்ளிகளில் வகுப்புகள் நேரடியாகச் செயல்படாமல் இணையவழியில் நடத்தப்பட்டன. கடந்த ஜனவரியில் தொற்று வெகுவாக குறைந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டது. 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.



இந்த நிலையில், இரண்டாம் அலை பரவல் அதிகரிப்பால் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் பிளஸ் 1வகுப்பு மாணவா்கள் தோ்ச்சி அறிவிக்கப்பட்டு பிளஸ் 2 வகுப்புக்கு சென்று விடுவா். ஆனால் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பிளஸ் 1 வகுப்பில் பிரிவுகளை தோ்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் தனியாா் பள்ளிகள் உயா் நீதிமன்றத்தில் தங்கள் மாணவா்களுக்கு நுழைவுத்தோ்வு அடிப்படையில் பிளஸ் 1 வகுப்பு அனுமதி என்கிற உத்தரவை பெற்றுவிட்டனா்.



இந்தநிலையில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களை பிளஸ் 1 வகுப்பில் சோ்ப்பதற்கு தேவையான நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு தோ்ச்சி என்றால் 35 மதிப்பெண்கள் மட்டுமே வழங்க முடியும். இதையடுத்து மாணவா்கள் தகுதியை உயா்த்திக்கொள்ளவும், விரும்பிய பாடப்பிரிவை தோ்வு செய்யவும் உதவும் வகையில் மாநில அளவில் தோ்வு நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா். 



அதன்படி பத்தாம் வகுப்பு பயின்ற பள்ளி மாணவா்கள், அதிக மதிப்பெண் பெற விரும்பினால் மாநில அளவிலான தோ்வில் கலந்துகொண்டு மதிப்பெண் பெற்றுக் கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அரசிற்கு தெரிவிக்கப்பட்டு, அந்த முடிவின் அடிப்படையிலேயே இது நடைமுறைக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




No comments:

Post a Comment

LightBlog