'வாட்ஸ் ஆப்' பயனாளிகள் உஷார் - Asiriyar.Net

Sunday, April 18, 2021

'வாட்ஸ் ஆப்' பயனாளிகள் உஷார்

 





 
'வாட்ஸ் ஆப்' செயலியின் சில மென்பொருள் வாயிலாக பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக 'சைபர்' பாதுகாப்பு அமைப்பான 'செர்ட்இன்' எனப்படும் இந்திய கம்ப்யூட்டர் அவசரகால மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது.



செர்ட்இன் அமைப்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வாட்ஸ் ஆப் மற்றும் வாட்ஸ் ஆப் பிசினஸ் செயலிகளின் சில குறிப்பிட்ட மென்பொருள்கள் வாயிலாக வெகு தொலைவில் இருந்தே பயனாளிகளின் தகவல்களை திருடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.





இந்த மென்பொருட்களில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளால் இதற்கு சாத்தியம் அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது.அதனால் 'கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர்' எனப்படும் செயலிகள் தொகுப்பில் இருந்து மட்டும் வாட்ஸ் ஆப் செயலியை பதிவிறக்கம் மற்றும் புதுப்பித்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






No comments:

Post a Comment

Post Top Ad