அரசுப் பள்ளிகளில் உபரி ஆசிரியா்களைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியா்களை காலியிடங்களுக்கு பணிநிரவல் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்,
‘உயா்நீதிமன்ற உத்தரவின்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியா்களை உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பணிநிரவல் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி உபரி ஆசிரியா் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment