அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை கடுமையாக உயரக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வருகிற 4 ஆம் தேதி வரை சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்க கூடுமென கூறப்பட்டுள்ளது.
5 ஆம் தேதி அன்று சேலம் ,நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 9 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கக் கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை நகரை பொறுத்த வரை அடுத்த இரு நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும், நகரின் அதிக பட்ச வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 82.4 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click Here To Download - Heatwave Protection - Pdf
No comments:
Post a Comment