16.04.2021 இன்று பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற காணொளிக்காட்சி கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்கு நாளை 17.04.2021 சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும் உயர்நிலை | மேல்நிலைப் பள்ளிகளை பொறுத்தமட்டில் இனி வரும் காலங்களில் வாரத்திற்கு 5 வேலை நாட்கள் ( திங்கள் முதல் வெள்ளி வரை ) மட்டுமே செயல்படும்.
இதனை தொடர்ந்து 17.04.2021 அன்று மேல்நிலைப் பள்ளி இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெறுவதால் , செய்முறைத் தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.
செய்முறை தேர்வு இல்லாத பிரிவு மாணவர்களுக்கு ( Non Practical Groups Students ) 17.04.2021 முதல் Study Leave விடப்படுகிறது. செய்முறைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் தங்களது செய்முறை தேர்வு முடிந்த அடுத்த நாள் முதல் Study Leave விடப்படுகிறது.
அனைத்து மாணவர்களையும் Hall Ticked வழங்கும் நாளன்று வரவழைத்து அரசின் நிலையான வழிகாட்டுதலை ( SOP ) பின்பற்றி Hall Ticket வழங்கப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment