பிளஸ் 2 வகுப்புகள் நாளை மீண்டும் துவக்கம் - Asiriyar.Net

Wednesday, April 7, 2021

பிளஸ் 2 வகுப்புகள் நாளை மீண்டும் துவக்கம்

 சட்டசபை தேர்தல் நேற்று முடிந்த நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் மீண்டும் வகுப்புகள் துவங்குகின்றன.தமிழகத்தில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக, ஓராண்டாக பள்ளி, கல்லுாரிகளில், நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 1 வரை பள்ளிகள் திறக்கப்பட்டு, ஒரு மாதம் மட்டுமே நேரடி வகுப்புகள் நடந்தன. மீண்டும் கொரோனா பரவல் காரணமாக, நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.பிளஸ் 2வுக்கு மட்டும், ஜன., 19 முதல் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு இம்மாதம், 1ம் தேதி முதல், தேர்தல் விடுமுறை விடப்பட்டது.நேற்று தேர்தல் முடிந்த நிலையில், இன்று பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. 'நாளை முதல், மீண்டும் நேரடி வகுப்புகள் துவங்கும்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.


Post Top Ad