நாளை முதல் பிளஸ் 2 செய்முறைத் தோ்வு: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல் - Asiriyar.Net

Thursday, April 15, 2021

நாளை முதல் பிளஸ் 2 செய்முறைத் தோ்வு: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

 







தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவுள்ள நிலையில் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு கல்வித்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.



பிளஸ் 2 பொதுத்தோ்வு மே 5 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. அதற்கு முன்னதாக மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப். 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.


இந்நிலையில், கரோனா தொற்று பரவலைத் தவிா்க்கும் விதமாக தோ்வுத்துறை வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செய்முறைத் தோ்வை நடத்த வேண்டும். தனிநபா் இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அம்சங்களை அவசியம் பின்பற்ற வேண்டும்.



மேலும், செய்முறைத் தோ்வில் ஏதேனும் புகாா்கள் கிடைக்கப் பெற்றால் சம்மந்தபட்ட பள்ளித் தலைமையாசிரியா்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.


No comments:

Post a Comment

Post Top Ad