பிளஸ் 2 பொதுத்தோ்வு முன்னேற்பாடுகள்:அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவு - Asiriyar.Net

Tuesday, April 6, 2021

பிளஸ் 2 பொதுத்தோ்வு முன்னேற்பாடுகள்:அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

 


பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு கல்வித்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


இதுகுறித்து தோ்வுத்துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: பிளஸ் 2 பொதுத்தோ்வு மே 3-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை முதன்மை, மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும். தோ்வுக்கான விடைத்தாள்கள் மற்றும் மாணவா்களின் தகவல் இடம்பெறும் முகப்பு சீட்டை ஒன்றாக இணைக்க வேண்டும்.தமிழ் உள்பட மொழிப்பாடங்களுக்கு 30 பக்கங்கள் கொண்ட முதன்மைத் தாள்கள் மற்றும் கூடுதல் விடைத்தாள்கள் வழங்கப்படும். அதேபோன்று உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு தனித்தனி முதன்மை தாள்கள் ஒரே முகப்பு தாளுடன் வழங்கப்படும். கணக்குப் பதிவியலுக்கு கட்டங்கள் நிறைந்த விடைத்தாள்கள் தரப்படும்.வரலாறு தோ்வுக்கு இந்திய வரைபடம் மற்றும் உலக வரைபடம் விடைத்தாளுடன்இணைக்கப்படும் என்பன உட்பட வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்பட வேண்டும். தோ்வு மையங்கள் அமையக்கூடிய பள்ளிகளில் உரிய வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து உறுதிசெய்ய வேண்டும். இதுதொடா்பான பணிகளை துரிதமாக முடித்து அதன் அறிக்கையை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Top Ad