கருணை அடிப்படை யில் வாரிசு வேலை பெற்ற மகனின் ஊதியத் இல் இருந்து 25 சதவீதம் பிடித்தம் செய்து தாய்க்கு வழங்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு. அதிரடியாக உத்தரவிட் டுள்ளது.
கருணை வேலை
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரைச்் சேர்ந்த வர் வள்ளியம்மாள். இவரது கணவர் திருமலை, தலைமை ஆசிரியராக பணியில் இருந்த போது இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்கள், 2, மகன்கள் உள்ளனர். அவர் களில் ஒரு மகன் தேசிங்குரா ஜாவுக்கு, கருணை அடிப்ப டையில் வாரிசு வேலையாக, தேவனூர் அரசு பள்ளியில் கிளார்க் பணி வழங்கப்பட் டது.
இந்தநிலையில், தன் மகன் தே௫ிங்குராஜா மீது துறை ரீதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வள்ளி யம்மாள் வழக்குத் தொடர்ந் தார். பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் அதல், கருணை அடிப்ப டையில் வேலை பெறும் போது, குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதாக தேசிங்கு ராஜா உத்தரவாதம் அளித் தார்.
அதனால் அனைவரும் அவருக்கு வேலை வழங்க ஆட்சேபனை இல்லை என்று கையெழுத்திட்டோம். ஆனால் வேலை கிடைத்ததும், குடும்பத்தைப் பார்க்க வில்லை. அவதூறாக பேசி என்னை அடித்துத்துன்புறுத்துகிறான். இது குறித்து போலீ சார், கடந்த ஆண்டு அவன் மீது வழக்குப்பதிவு செய்துள் எனர். எனவே, துறை ரீதுயான விசாரணை நடத்தி அவனை பணியிடை நீக்கம் செய்து, அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட 'வேண்டும்' என்று கூறியிருந்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், 'மூத்த சகோதரிக்கு அனைத்து தகுதி இருந்தும், இந்த வாரிசு வேலையை தேசிங்குராஜா வுக்கு விட்டுக் கொடுத்துள்ள. னர். மனுதாரர் தன் மகனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதுபோன்ற. உத்தரவை ஐகோர்ட்டு பிறப் பிக்க முடியாது. அதையெல் லாம் அரசு உயர் அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்தி முடிவு செய்ய வேண் டும்.
இருந்தாலும், வாரிசு வேலை பெற்ற மகன் 25 சதவீதம் பெற மனுதாரருக்கு உரிமை உள் எது. எனவே, தேசிங்குராஜா வின் ஊதியத்தில் இருந்து 25 சதவீதத்தை பிடித்தம் செய்து மனுதாரருக்கு வழங்கவேண் டும். இந்த வழக்கை வருகிற ஜுன் /4-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறேன். அதற்கு கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், தேசிங்குராஜாவும் பதில்மனு தாக்கல் செய்யவேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment