மங்களகரமான பிலவ வருட தமிழ்ப் புத்தாண்டு 14-04-2021 புதன்கிழமை
பிலவ வருட பிறப்பு புதன்கிழமை 14.04.2021 சித்திரை 1 பஞ்சாங்கம் கணிப்பு
பிலவ வருடம் சித்திரை 1, புதன்கிழமை, April 14, 2021 பஞ்சாங்கம் -திதி : 12:48 PM வரை துவிதியை பின்னர் திருதியை
நட்சத்திரம் : பரணி 05:23 PM வரை பிறகு கார்த்திகை
யோகம் : ப்ரீதி 04:15 PM வரை, அதன் பின் ஆயுஷ்மான்
கரணம் : கௌலவம் 12:48 PM வரை பிறகு சைதுளை 02:07 AM வரை பிறகு கரசை.
கரசை - Apr 15 02:07 AM – Apr 15 03:27 PM
யோகம் ப்ரீதி - Apr 13 03:16 PM – Apr 14 04:15 PM
ஆயுஷ்மான் - Apr 14 04:15 PM – Apr 15 05:20 PM
நாள் - கீழ் நோக்கு நாள்
பிறை - வளர்பிறை
திதி சுக்ல பக்ஷ துவிதியை - Apr 13 10:17 AM – Apr 14 12:48 PMசுக்ல பக்ஷ திருதியை - Apr 14 12:48 PM – Apr 15 03:27 PM வாரம் புதன்கிழமை
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் - 6:00 AM
சூரியஸ்தமம் - 6:17 PM
சந்திரௌதயம் - Apr 14 7:21 AM
சந்திராஸ்தமனம் - Apr 14 8:13 PM
சூரியன் மேஷம் ராசியில் சந்திர ராசி
பூர்ணிமாந்த முறை - சைத்ரம்
விக்கிரம ஆண்டு - 2078, ஆனந்த
சக ஆண்டு - 1943, பிலவ
சக ஆண்டு (தேசிய காலண்டர்) - சைத்ரம் 24, 1943
அறுபது ஆண்டுகளுக்கும் இடைக்காட்டுச் சித்தர் அந்தந்த ஆண்டுகளுக்கான பலன்களை வெண்பாவாக பாடி வைத்துள்ளார்.
பிலவ ஆண்டுக்கான இடைக்காட்டுச் சித்தர் பாடிய வெண்பா:
"பிலவத்தில் மாரி கொஞ்சம் பீடை மிகும் ராசர்
சல மிகுதி துன்பம் தரும் நலமில்லை
நாலுகாற் சீவனெல்லாம் நாசமாம் வெள்ளாண்மை
பாலுமின்றிச் செய்புவனம் பாழ்"
இந்தப் பாடலுக்கான விளக்கம்
பிலவத்தில் மழை அளவு கொஞ்சமாகவே இருக்கும். நாடாளும் அரசர்களுக்கு நோய் உண்டாகும். பருவம் தவறிப் பெய்யும் மழையால் துன்பம் உண்டாகும். ஆடு மாடுகள் முதலான கால்நடைகள் துயரத்தை அனுபவிக்கும். வேளாண்மை செழித்து வரும் வேளையில் இயற்கையால் பாதிப்பு ஏற்படும் என்று வெண்பா கூறுகிறது.
பிலவ ஆண்டான தமிழ்ப் புத்தாண்டு, மேஷ லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. பரணி சுக்கிரன் நட்சத்திரம் என்பதால் பெண்களுக்கு உற்சாகத்தையும் மனநிறைவும் தரும்படியான ஆண்டாக பிலவ ஆண்டு இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் ஆன தம்பதியருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். இந்த ஆண்டில் மிக அதிகம் பேருக்கு திருமணங்கள் நடக்கும்.
சூரியன் முதல் சனி வரை
பிலவ வருடம் பிறக்கும் போது கிரக நிலைகள் மிக வலுவாக இருக்கின்றன. பஞ்சாங்கப்படி நவ கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால், மேஷத்தில் சூரியன் உச்சமாகவும் உடன் சுக்கிரனும் சந்திரனும் பயணிக்கின்றனர். ரிஷபத்தில் ராகுவும், மிதுன ராசியில் செவ்வாயும் பயணிக்கின்றனர்.விருச்சிக ராசியில் கேது பகவானும், மகர ராசியில் ஆட்சி பலத்தோடு சனிபகவானும், கும்ப ராசியில் அதிசார குரு பகவானும், மீனத்தில் புதன் பகவான் நீசமடைந்தும் சஞ்சரிக்கின்றன.
விவசாயம் செழிக்கும்
பரணி நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறப்பதால் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்படியான வருமானம் சிறப்பாகவே இருக்கும். ஹோட்டல், உணவுத் தொழில் இந்த ஆண்டும் கொடிகட்டிப் பறக்கும். நிறைய பேர் ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். விவசாயம் செழிப்பாக இருக்கும், பங்கு வர்த்தகம் சிறப்பாக இருக்கும்.மந்த நிலையில் இருந்த கட்டுமானத் தொழில் அசுர வேகத்தில் வளர்ச்சியடையும்.
தொழில் லாபம் வரும்
வாகனம் தொடர்பான தொழில் சிறப்பாகவே இருக்கும்.சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்கள், உற்பத்தி தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் மன நிறைவைத் தரக் கூடிய வகையில் தொழில் வளர்ச்சி ஏற்படும். லாபமும் கிடைக்கும்.
அரசு, தனியார் வேலை
தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வேலை மாற்றம் ஏற்படும். தற்போது பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடிகளை சந்திக்க வேண்டியது வரும். அரசுப் பணியாளர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள். பிரச்சினைகள், வழக்குகள் என அதிகம் சந்திக்க வேண்டியது வரும்.
வேலை வாய்ப்பு எப்படி
தகவல் தொழில்நுட்பத் துறையில் மிதமான வளர்ச்சி இருக்கும். அந்தத் துறையில் இருப்பவர்களுக்கு வேலை இழப்பு அல்லது வேலை மாற்றம் உண்டாகும். கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் வெளிநாடு தொடர்பு உடைய தொழில்களில் மந்தநிலை ஏற்படும். வெளிநாட்டு வர்த்தகம் குறையும்
கலைத்துறை வாய்ப்பு
இசை நாட்டியக் கலைஞர்களுக்கு நல்ல வளர்ச்சியும், அங்கீகாரமும், மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். சார்வரி வருடத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது திறைத்துறை கலைஞர்கள்தான். இந்த பிலவ ஆண்டிலும் திரைத்துறைக் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் ஓரளவுக்கு மட்டுமே வளர்ச்சியை அடைய முடியும்.
நோய் பாதிப்பு
பிலவ வருடம் புதன்கிழமை வருடப்பிறப்பு இருப்பதால் நன்றாக மழை பெய்யும். செவ்வாயின் வீட்டில் சுக்கிரன், சுக்கிரன் வீட்டில் செவ்வாய் இருப்பதால் கால்நடைகளுக்கு புதிய நோய்கள் தாக்கும். விவசாயிகளுக்கும் பாதிப்பு அதிகமாகும் வாகன போக்குவரத்து மூலம் சாலை விபத்து ஏற்படும். பலவிதமான வியாதிகளால் மக்கள் துன்பப்படுவார்கள். மருத்துவர்களை கடவுளாக மக்கள் பாவிக்கும் நேரம் வரும். புழுதி சூறாவளி காற்றுகள் பலமாகத் தாக்கும். ஆன்லைன் மூலம் வியாபாரம் அதிகரிக்கும்.
அரசு ஆட்சி அதிகாரம்
அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் நடக்கும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டியது வரும். அரசியல்வாதிகளுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படும். பத்திரிகை மற்றும் ஊடகத் தொழில் சில பாதிப்புகளையும், பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். பாதிப்புகள் குறைய தொழில் வளர்ச்சியடைய ராகு காலத்தில் ஸ்ரீதுர்க்கையை வணங்கலாம். சனிபகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கலாம்.
கல்வித்துறை
சார்வரி வருடத்தில் மாணவர்களுக்கு கல்வி சாலைகளின் வாசனையே இல்லாமல் போய்விட்டது ஆன்லைன் கல்விதான் ஆசானாக இருந்தது. ஏராளமான மாணவர்கள் வாசிக்கம் பழக்கத்தை மறந்து விட்டனர். எனவே இந்த பிலவ ஆண்டில் பல மாணவர்களுக்கு ஞாபக மறதி, கவனமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தேர்ச்சி விகிதம் குறையவும் வாய்ப்பு உண்டு. கல்வியைத் தொடர முடியாத சூழ்நிலைகள் கூட ஏற்படும், மாணவர்கள் கல்வியில் மிக அதிக அளவில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
பிலவ வருடத்தில் இரண்டு மரக்கால் மழை பொழியும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது. இந்த பிலவ வருடத்தில் குரு பகவான் முதலில் கும்ப ராசியில் அதிசாரமாக பயணித்து பின்னர் மகர ராசிக்கு வந்து மீண்டும் கும்பம், மீன ராசிகளில் பயணம் செய்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம், ரிஷபம், மிதுனம் கடக ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
மேஷம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர் கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபா ரத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
ரிஷபம்:
குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறு வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
மிதுனம்:
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.
கடகம்:
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகை கள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
சிம்மம்:
குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தி யோகத்தில் அதிகாரிகள்உங்களுக்கு முன்னு ரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
கன்னி:
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.பணப்புழக்கம் கணிச மாக உயரும். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும். புதிய பாதை தெரியும் நாள்.
துலாம்:
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும் அலைச்சலும் இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோ கத்தில் உங்களை பற்றி வதந்திகள் வரக்கூடும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
விருச்சிகம்:
பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண் டிருக்க வேண்டாம். உறவினர்கள் நண்பர்கள் சிலர் பணம் கேட்டுதொந்தரவு தருவார்கள். அசைவகார உணவுகளை தவிர்ப்பதுநல்லது. வீடுவாகனத்தை சீர் செய்வீர்கள். செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
தனுசு:
தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.
மகரம்:
மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர் கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மாறுபட்ட அணுகுமுறையால் சாதித்து காட்டும் நாள்.
கும்பம்:
கடந்த இரண்டு நாட்களாக கணவன் -மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மகிழ்ச்சியான நாள்.
மீனம்:
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.
No comments:
Post a Comment