கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழக கல்வித்துறை அதிகாரிகள் அவரச ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். திட்டமிட்டபடி நடத்துவதா? தள்ளிவைப்பதா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார், இயக்குநர்கள் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
+2 பொதுத்தேர்வை மே 3ஆம் தேதி திட்டமிட்டப்படி நடத்துவதா, ஒத்திவைப்பதா என்பது பற்றி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை
ஏப்.5ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்திருந்தார் செயலாளர். இந்நிலையில் தேர்தல் முடிந்திருப்பதால் கொரோனா அதிகரிப்பு காரணமாக தேர்வை எப்படி நடத்துவது என்பது பற்றி ஆலோசனை நடைபெறவுள்ளது. அதன் பின்னரே 2 பொதுத்தேர்வை மே 3ஆம் தேதி திட்டமிட்டப்படி நடத்துவதா, ஒத்திவைப்பதா என்பது பற்றி தெரியவரும்.
No comments:
Post a Comment