ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை! - Asiriyar.Net

Wednesday, December 18, 2019

ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!





அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. வரும் 23ம் தேதியுடன் இந்த தேர்வுகள் நிறைவுபெற உள்ள நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். விடைத்தாள்களை திருத்தும் போது ஆசிரியர்கள் கவனத்துடன் சரியான முறையில் மதிப்பீடு செய்ய பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மதிப்பீடு செய்யபட்ட விடைத்தாள்களை மற்ற ஆசிரியர்களை கொண்டு மறுகூட்டலுக்கு உட்படுத்தவும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


சரியான முறையில் விடைத்தாளை மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Post Top Ad