இந்த செய்தி தொகுப்பில் இயற்கையான முறையில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருந்து பற்றி விரிவாக காண்போம்.
கல்லீரல் பாதிப்பு மற்றும் பித்தக்குழாய் அடைப்பு போன்றவற்றால் உடலில் தேவையற்ற பிலிரூபின் என்ற கழிவுப்பொருள் தங்கிவிடுவதால் உடல் மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமே வாந்தி, குமட்டல், பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலதுபக்க மேல்பாகத்தில் வலி, மூட்டுவலி, வயிறுவீக்கம், காய்ச்சல், ரத்தக்கசிவு போன்ற நோய்களின் அறிகுறிகள் தெரியும்.
மேலும் கண்ணில் உள்ள வெள்ளைப்படலம் மஞ்சள் நிறமாக மாறும்.அதுமட்டுமல்லாது நாக்கின் அடிப்பகுதியிலும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
மஞ்சள் காமாலை தாக்கிவிட்டாலே உடல் மெலிந்து காணப்படுவார்கள் . இந்த காமாலை இரண்டு வகைப்படும்.அவை,அடைப்பு காமாலை,அடைப்பில்லா காமாலை என வகைப்படும்.
மஞ்சள் காமாலையை போக்கும் இயற்கை மருந்து :
கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் அனைத்தையும் சம அளவு எடுத்து அதை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.பின்பு அதனுடன் சர்க்கரை கலந்து இதை தினமும் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.
கீழாநெல்லி, சீரகம், பூவரச பழுத்த இலை, கரிசலாங்கண்ணி ஆகியவற்றை அனைத்திலும் 3 கிராம் வீதம் எடுத்து அதை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து கசாயம் செய்து அதை தினமும் காலை,மாலை என இரண்டு வேளையும் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.