விரைவில் அரசு பள்ளிக்கூடங்களில் 4000 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், ஐந்தாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ மாணவியருக்கு வாரத்தில் ஒரு நாள் பாட்டு , மற்றும் நடனபயிற்சிகள் வழங்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் . விரைவில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் திகழப் போகிறது என அவர் அப்போது தெரிவித்தார் .
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியதாவது , அரசுப் பள்ளிகள் காலங்காலமாக கரும்பலகை நடைமுறையில் உள்ளது ஆனால் வரும் பிப்ரவரி மாதம் முதல் 72 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு வசதிகள் செய்யப்படவுள்ளது என்றார் .
எப்போதும் இல்லாத அளவிற்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றார் , தற்போதுள்ள நிலையில் சில பாடங்களுக்கு மட்டும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது விரைவில் அதை நிவர்த்தி செய்ய சுமார் 4000 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் . குறிப்பாக ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவ மாணவியருக்கு வாரத்தில் ஒருநாள் பாட்டு , நடனம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும் என்றார். வரும் பிப்ரவரி மாதத்திற்குள் அரசுப்பள்ளிகளை விஞ்சக்கூடிய அளவிற்கு அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அவர் தெரிவித்தார்.