நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2020 ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பாக தங்கள் மாவட்டத்தில் Cluster Resource Centre ( CRC ) ஆக செயல்படும் பள்ளிகள் மற்றும் CRC பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளின் விவரம் ( Except : CBSE , ICSE & KV ) ( பள்ளி எண் / UDISE CODE ) மற்றும் அப்பள்ளிகளின் மூலம் ஐந்து / எட்டாம் வகுப்பு தேர்வெழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை பாடம் / பயிற்று மொழி வாரியாகவும் , பிற்சேர்க்கை 3 - ல் குறிப்பிட்டுள்ள விவரங்களினையும் " Excel Format " - ல் இத்துடன் இணைத்தனுப்பப்படும் படிவங்களின்படி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குகென தனித்தனியே தயாரித்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தேர்வுத் துறையின் மூலம் உரிய அறிவுரை வழங்கப்படும் போது இவ்விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதன்கண் நேரடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .