இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி பணமோ, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டோ இல்லாமலே கூட கடைகளில் பொருட்களை வாங்கி மகிழலாம். அதாவது, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் ஆப் மூலமாகவே பணத்தை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக நீங்கள் உங்கள் செல்போனில் மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும்.
கடையில் ஒரு பொருளை வாங்கும் போது, உங்கள் செல்போனை அன்லாக் செய்துவிட்டு, பாயின்ட்-ஆப்-சேல் (பிஓஎஸ்) அருகே கொண்டுச் சென்றால் போதும், உங்களது எஸ்பிஐ டெபிட் அல்லது கிரெடிட் கார்டில் இருந்து பணம் தானாகவே செலுத்தப்பட்டுவிடும்.
இதன் மூலம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் கிரெடிட் அல்லது டெபிட் அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கவலை எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இனி இல்லை.
இப்படி செல்போனை அன்லாக் செய்துவிட்டால் போதும், பணம் செலுத்தப்பட்டுவிடும் என்பது ஆபத்தானது அல்லவா என்று கேட்பவர்களுக்கு, ஸ்கிம்மர், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தகவல்கள் திருட்டு போன்றவற்றில் இருந்து தப்பிக்க இது உதவும் என்று கூறுகிறது வங்கி தரப்பு.
செல்போன் ஆப்பை எப்படி இன்ஸ்டால் செய்வது?
பிளே ஸ்டோரில் இருந்து எஸ்பிஐ கார்டு ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும்.
ஃப்ர்ஸ்ட் டைம் யூஸர் அல்லது சைன் அப் லிங்கை கிளிக் செய்யவும்.
உங்களது கிரெடிட் கார்டு எண் அல்லது டெபிட் கார்டின் சிவிவி எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொடுத்து ஒன் டைம் பாஸ்வேர்டைப் பெறவும்.
உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட செல்போன் அல்லது மின்னஞ்சலுக்கு அந்த ஒன் டைம் பாஸ்வேர்டு வரும். அந்த ஓடிபியை பதிவு செய்து, பிரஸீட் என்பதை அழுத்தவும்.
பிறகு உங்களது யூசர் ஐடி, பாஸ்வேர்ட், மீண்டும் பாஸ்வேர்டை பதிவு செய்து கன்ஃபர்ம்-ஐ கிளிக் செய்யவும்.
ஆப்பை எளிதாக இயக்க எம்-பின் மற்றும் டச் ஐடி-ஐ உருவாக்கிக் கொள்ளலாம்.
உங்களுக்கு யூசர் ஐடியும், பாஸ்வேர்டும் ஏற்கனவே இருந்தால், எஸ்பிஐ கார்டு செல்போன் ஆப்பை டவுன்லோடு செய்து, லாகின் செய்யவும்.
பிறகு, உங்களது யூசர் ஐடி-ஐ பதிவு செய்து பிரஸீட் கொடுக்கவும். பாஸ்வேர்டை போட்டு லாக் இன் செய்யலாம்.
உங்களுக்கு தற்போது ஓடிபி என்ற ஒன்டைம்பாஸ்வேர்டு செல்போன் அல்லது மின்னஞ்சலுக்கு வரும். அதனை பதிவு செய்து பிரஸீட் கொடுக்கவும்.
எளிதாக பயன்படுத்த எம்-பின் மற்றும் டச் ஐடியை உருவாக்கிக் கொள்ளலாம் என்று வங்கித் தரப்பு தெரிவிக்கிறது.