தனியார் பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு..! - Asiriyar.Net

Tuesday, December 31, 2019

தனியார் பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு..!




தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவித்துள்ளார்.

அரையாண்டு விடுமுறை முடிந்து தனியார் பள்ளிகள் ஜனவரி 3ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறுகிறது. ஆனால், வாக்குச்சீட்டு முறை என்பதால் வாக்கு எண்ணிக்கை மறுநாள் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது.இதனையடுத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் ஜனவரி 4ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தனியார் பள்ளிகளும் ஜனவரி 4ம் தேதியே திறக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவித்துள்ளார்.

Post Top Ad