பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை கிடையாது
மாணவர்கள் பொங்கல் தினத்தன்று பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வானது சமீபத்தில் நடந்து முடிந்து அதற்கான விடுமுறையும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.இந்நிலையில் மீண்டும் பள்ளியானது ஜன.,3ல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஒரு உத்தர விட்டுள்ளது அந்த உத்தரவில் ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.