தொடக்கக் கல்வி - கற்றல் கற்பித்தல் பணி -வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் .
பள்ளிகள் பார்வை (School Visits) ஆண்டாய்வு(Annual Inspection) தொடர்பாக அறிவுரைகள்
வழங்குதல்-சார்ந்து.
அரசாணை நிலை எண் பள்ளிக் கல்வி
பட்ஜெட் 1) துறை, நாள் 18.05.2018
பார்வையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணையில் ஊராட்சி ஒன்றிய /
நகராட்சி / அரசு/ அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்திட வட்டாரக் கல்விஅலுவலர்கள் (BEOS) பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வையிடுதல் மற்றும்
ஆண்டாய்வு செய்வதை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் (CEOS)உறுதி செய்திட ஆணையிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் (BEOS) பள்ளிகளில்
பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல்திறன், நலத்திட்டங்கள் செயல்படுத்துதல், பள்ளி சுற்றுப்புறச் சூழல் ஆகியவை
சிறந்து விளங்கிடப் பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வையிடுதல் (Surprise
Visit) மற்றும் ஆண்டாய்வு செய்தல் (Annual Inspection) மிகவும் அவசியமாகும்.
எனவே பள்ளிகள் முன்னறிவிப்பின்றி பார்வையிடுதல், ஆண்டாய்வு
மேற்கொள்ளும் போது கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு
அறிவுறுத்தப்படுகிறது.
1 வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளி முன் அறிவிப்பின்றி பார்வையின்
போது காலை வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்த்தாய்
வாழ்த்து, தேசியக் கொடி ஏற்றுதல், கொடிப் பாட்டு, உறுதிமொழி,
திருக்குறள் வாசித்தல், தலைப்புச் செய்திகள் வாசித்தல், பொது
அறிவு செய்தி தெரிவித்தல், ஆசிரியர் அறநெறி உரை மற்றும்
நாட்டுப்பண் பாடுதல் போன்றவை இடம்பெறுதலை உறுதி செய்தல்
வேண்டும்.
2.வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளை முன் அறிவிப்பின்றி
பார்வையிடும்போது ஒரு பள்ளியில் குறைந்தது 2 மணி நேரம் இருத்தல்
வேண்டும்.