SBI வாடிக்கையாளர்களா நீங்கள்..? ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய முறை..! - Asiriyar.Net

Saturday, December 28, 2019

SBI வாடிக்கையாளர்களா நீங்கள்..? ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய முறை..!





ஏடிஎம்களில் இரவு நேரங்களில் ஏற்படும் மோசடிகளைத் தடுக்க SBI வங்கி புதிய முறையை அமல்படுத்த உள்ளது

பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்களில் இரவு நேரங்களில், அதாவது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு OTP எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை அனுப்ப பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.

இதன்படி, எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க விரும்பும் SBI வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். இந்த கடவு எண்ணைப் பயன்படுத்தி மட்டுமே ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியும். இந்த முறையானது SBI வங்கி ஏடிஎம்களில் மட்டுமே செயல்படும்.

SBI அல்லாத வேறு வங்கிக் கிளை ஏடிஎம்களில் செயல்படாது.



Post Top Ad