பாரத ஸ்டேட் வங்கியால் வழங்கப்பட்ட மேக்னடிக் ஸ்டிரிப் கொண்ட ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், ஜனவரி 1ம் தேதி முதல் செயல்படாது என்று எஸ்பிஐ வங்கியின் டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது மேக்னடிக் ஸ்டிரிப் கொண்ட ஏடிஎம் அட்டைகளும், கிரெடிட் அட்டைகளும் வரும் 31ம் தேதியுடன் முடக்கப்படும் என்றும், ஜனவரி 1ம் தேதி முதல் அவை செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து உடனடியாக அந்த அட்டைகளை வைத்திருப்போர், தாங்கள் கணக்கு பராமரிக்கும் வங்கி கிளைக்கு சென்று இவிஎம் சிப் மற்றும் பின் அடிப்படையிலான அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட அட்டைகளை விண்ணப்பித்து பெறும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இவிஎம் சிப் மற்றும் பின் அடிப்படையிலான அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட அட்டைகளை பெற்றவர்கள் எந்த கவலையும் பட வேண்டாம், ஜனவரி 1ம் தேதிக்கு பிறகும் அந்த அட்டைகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.