`நீ மட்டும் குடும்பம், குழந்தைகளோடு இருக்கிறாய்!' -ஆசிரியையின் விபரீத முடிவால் சிக்கிய பேராசிரியர் - Asiriyar.Net

Thursday, December 19, 2019

`நீ மட்டும் குடும்பம், குழந்தைகளோடு இருக்கிறாய்!' -ஆசிரியையின் விபரீத முடிவால் சிக்கிய பேராசிரியர்






அரும்பாக்கத்தில் பிரபலமான தனியார் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் முதல்மாடியில் உள்ள தெலுங்கு பாடப்பிரிவின் வகுப்பறைக்குள் அரசுப்பள்ளி ஆசிரியை ஹரிசாந்தி (32) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த வழக்கை அண்ணா நகர் துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஸ்ரீனிவாசலு உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர் விசாரணை நடத்திவருகிறார். போலீஸார் நடத்திய விசாரணையில் ஹரிசாந்தி தற்கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது.

தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியை
இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, பள்ளிப்பட்டு தாலுகா, கர்லபாக்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, ராஜகுமாரி ஆகியோரின் மகள் ஹரிசாந்தி.



பி.ஹெச்டி படித்த இவர், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றிவந்தார். 5 ஆண்டுகளுக்குமுன் அந்த வேலையை ராஜினாமா செய்தார்.

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஹரிசாந்தி, கடந்த 2012-ம் ஆண்டு பெரம்பூர் மாநகராட்சிப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தார். தினமும் கர்லபாக்கத்திலிருந்து பெரம்பூருக்கு வேலைக்குச் சென்று வர சிரமமாக இருந்ததால் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருத்தணியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தார். கடந்த 17-ம் தேதி பிற்பகலில் பள்ளியிலிருந்து அரும்பாக்கம் கல்லூரிக்கு ஆசிரியை ஹரிசாந்தி வந்துள்ளார். என்ட்ரி பாஸை வாங்கிக்கொண்டு கல்லூரியில் உள்ள நண்பர்களைச் சந்தித்துள்ளார்.

பேராசிரியர்ஹரிசாந்தியும் நானும் காதலித்தோம். ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எனக்குத் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதன்பிறகும் ஹரிசாந்தி என்னைச் சந்திக்கக் கல்லூரிக்கு வருவார். கல்லூரியில் விசாரித்துவிட்டு வரும் போலீஸ் அதிகாரி
ஹரிசாந்தி, கல்லூரியில் யாரையெல்லாம் சந்தித்தார் என்ற பட்டியலைச் சேகரித்து அவர்களிடம் விசாரித்தோம். மேலும் சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையிலும் விசாரணை நடத்தினோம். இந்தச் சமயத்தில் கல்லூரிப் பணியிலிருந்து விலகிய ஹரிசாந்தி, அங்கு வேலை பார்த்துவரும் பேராசிரியர் ஒருவரைச் சந்திக்க அடிக்கடி வரும் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அந்தப் பேராசிரியரிடம் விசாரணை நடத்தினோம்.

அப்போது, அவர், `படிக்கும் காலத்திலிருந்தே எனக்கு ஹரிசாந்தியைத் தெரியும். எங்கள் இருவருக்கும் ஒரே மாவட்டம். நானும் தெலுங்கு டிப்பார்ட்மென்டில் வேலைக்குச் சேர்ந்தேன். அதனால் இருவரும் நட்பாகப் பழகினோம்.

பின்னர், ஹரிசாந்தியும் நானும் காதலித்தோம். ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்குமுன் எனக்குத் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அதன்பிறகும் ஹரிசாந்தி என்னைச் சந்திக்கக் கல்லூரிக்கு வருவார். அப்போதெல்லாம், `நீ மட்டும் குடும்பம், குழந்தைகள் என ஜாலியாக இருக்கிறாய். ஆனால் நான் மட்டும் உனக்காக இன்னும் திருமணமாகாமல் தனியாக இருக்கிறேன்' என்று கூறுவார்.

சம்பவத்தன்று கல்லூரியில் என்னை ஹரிசாந்தி சந்தித்தார். அப்போதும், `என்னை நீ திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டாய்' என்று கூறினார். பின்னர் ஹரிசாந்தி கல்லூரியில் மற்ற நண்பர்களைச் சந்திக்கச் சென்றுவிட்டார்.



கல்லூரி முடிந்தபிறகு நான் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். பின்னர்தான் ஹரிசாந்தி, தற்கொலை செய்த தகவல் எனக்குத் தெரியவந்தது' என்று கூறினார்.

தொடர்ந்து அந்தப் பேராசிரியரிடம் விசாரணை நடந்துவருகிறது. இதற்கிடையில் ஹரிசாந்தியின் சகோதரர் மணிகண்டன், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்அடிப்படையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஹரிசாந்தியின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் ஹரிசாந்தி மரணத்துக்கான காரணம் தெரியவரும். அவரின் இடது கையில் கத்தியால் வெட்டிய காயம் உள்ளது. அது, எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும் விசாரித்துவருகிறோம்" என்கின்றனர்.


Post Top Ad