நமது ஆரோக்கியம்... நமது கையில்... என்ன செய்யலாம்? - Asiriyar.Net

Saturday, December 7, 2019

நமது ஆரோக்கியம்... நமது கையில்... என்ன செய்யலாம்?




பல வகையான மாறுபட்ட சூழ்நிலைகளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்... இந்நிலையில் நாம் நம் உடலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். எப்படி, எவ்வாறு நம் உடலை பாதுகாத்து கொள்ள வேண்டும்? என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் நல்ல கொழுப்பு, உடல்நலத்தை காக்கும் செலினியம் போன்றவை நட்ஸ் வகை உணவுகளில் அதிகம் உள்ளது. எனவே தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகை உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலை ஆரோக்கியத்துடனும், இளமையுடனும் வைத்துக்கொள்ள முடியும்.


காலை உணவை தவிர்க்காமல் சாப்பிடுங்கள். காலை உணவையும், இரவு உணவையும் 11 மணிக்கு மேல் சாப்பிடாமல், 8 முதல் 9 மணிக்குள் சாப்பிட பழகிக் கொள்ளுங்கள்.

அதிக பசியின்போது அதிகமாக உணவை சாப்பிடக்கூடாது. இது உடல்நலப் பிரச்சனைகளையும், உடல் பருமனையும் அதிகரிக்கும்.

தினந்தோறும் அளவாக காபி பருகுவதன் மூலம் சர்க்கரை நோய், உணவுக்குழாய் கேன்சர், ஈரல் நோய்களைத் தடுக்கலாம். உங்கள் தினசரி உணவில், கொழுப்பு 20 கிராம்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது.

ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளமிடுவதில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் பங்கு அதிகம் உள்ளது. எனவே 5 வகை பழங்கள், காய்கறிகளை தினந்தோறும் சாப்பிடுங்கள். உங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை தினந்தோறும் மேற்கொள்ளுங்கள்.

Post Top Ad