நாளை (டிசம்பர் 11 ) ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை! திடீரென உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! - Asiriyar.Net

Tuesday, December 10, 2019

நாளை (டிசம்பர் 11 ) ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை! திடீரென உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!





கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மலையின் உச்சியில் தீபம் ஏற்றபடுவதையடுத்து இன்று டிசம்பர் 10 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இதனால் அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகள் என அனைத்திற்கும் விடுமுறை கிடைத்தது.


இன்று மாலை 6 மணி அளவில் 2668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் பெரிய கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீப ஜோதியை தரிசிப்பதற்காக தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் திருவண்ணாமலையில் குவிந்து விட்டனர். இதன்காரணமாக அவர்கள் வெளியேற நேரம் பிடிக்கும் என்பதால், நாளை போக்குவரத்து இடையூறு ஏற்படும் எனக் கருதி, நாளையும் அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

உள்ளூர் விடுமுறை விடப்பட்டதை அடுத்து நாளை பள்ளி கல்லூரிகள் இயங்காது எனவும் அரசு அலுவலகங்கள் செயல்படாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Post Top Ad