TNTET Paper 2 - ஆசிரியர் தகுதித்தேர்வு - 2வது தாள் தேர்வில் 95% பட்டதாரிகள் தோல்வி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, March 29, 2023

TNTET Paper 2 - ஆசிரியர் தகுதித்தேர்வு - 2வது தாள் தேர்வில் 95% பட்டதாரிகள் தோல்வி

 



 ஆசிரியர் தகுதித் தேர்வின் 2-வது தாள் தேர்வில் 95 சதவீத பட்டதாரிகள் தேர்ச்சி பெறவில்லை. கடந்த முறை நடந்த 2-வது தாள் தேர்வில் 0.08% பட்டதாரிகளே தேர்ச்சி பெற்ற நிலையில் இம்முறை 5% தேர்ச்சி பெற்றுள்ளனர். 2022-ம் ஆண்டுக்கான டெட் தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் 16 முதல் 19 வரை நடைபெற்றது.


அரசு பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்பு எடுக்க ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற வேண்டும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த ஆசிரியர் தகுதி தேர்வின் 2-ம் தாள் முடிவு நேற்று வெளியானது.


இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4,01,986 பேர் இந்த தேர்வை எழுத பதிவு செய்த நிலையில் 2.54 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியது தெரியவந்துள்ளது. 1.5 லட்சம் பேர் தேர்வுக்கே வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்ற 2.50 லட்சம் பேரில் 20 ஆயிரத்திற்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளில் 98 சதவீதம் பட்டதாரி ஆசிரியர்கள் தோல்வி அடைந்துள்ளது கல்வியின் தரத்தையே கேள்விக்குறி ஆக்கி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்


Post Top Ad