11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 22.09.2022 முதல் காலாண்டு தேர்வு: பள்ளி கல்வித் துறை அட்டவணை வெளியீடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, September 14, 2022

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 22.09.2022 முதல் காலாண்டு தேர்வு: பள்ளி கல்வித் துறை அட்டவணை வெளியீடு

 

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 22 முதல் 30ம் தேதி வரை 11 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து, அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. 


தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு 12ம் வகுப்புக்கு ஜூன் 20ம் தேதியும், 11ம் வகுப்புக்கு ஜூன் 27ம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், முதல் பருவத் தேர்வுகள் கடந்த மாதம் நடத்தி முடிக்கப்பட்டன. நடப்பு கல்விஆண்டுக்கான நாள்காட்டியை பள்ளி திறப்புக்கு முன்னரே தமிழக அரசு வெளியிட்டது.


அதில், பள்ளி இயங்கும் நாட்கள், விடுமுறை விவரங்கள், காலாண்டு,அரையாண்டு, பொதுத்தேர்வு நடைபெறும் நாட்கள் உள்ளிட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. மேலும், காலச் சூழலுக்கேற்ப தேதிகளில் மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில், தற்போது காலாண்டுத் தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித் துறை உறுதிசெய்து, அதற்கான அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, 11, 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 22 முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து, மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


இதற்கான விரிவான கால அட்டவணை மாவட்டம் வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு போலவே காலாண்டுத் தேர்வுகளையும் நடத்த வேண்டும். 


இதற்கான வினாத்தாள்கள் தேர்வுத் துறை மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கல்வித் துறை தெரிவித்துள்ளது. பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, 12ம் வகுப்புகளுக்கு 22ம்தேதி மொழிப்பாடமும், 23ம்தேதி ஆங்கிலமும், 26ம்தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, வேளாண் அறிவியல், 27ம்தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், தொழில்சார் திறன், 28ம்தேதி வேதியியல், கணக்கியல், புவியியல், 29ம்தேதி கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வீட்டுமுறை அறிவியல், அரசியல் அறிவியல், 30ம்தேதி தாவரவியல், உயிரியியல், வரலாறு, பேசிக் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அலுவலக மேலாண்மை, வணிக கணக்கு மற்றும் புள்ளியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகிறது. 


11ம் வகுப்புக்கு 22ம்தேதி ஆங்கில பாடம், 23ம்தேதி மொழிப்பாடம், 26ம்தேதி வேதியியல், கணக்கியல், புவியியல், 27ம்தேதி தாவரவியல், உயிரியியல், வரலாறு, பேசிக் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங்,பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக்  ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அலுவலக  மேலாண்மை, வணிக கணக்கு மற்றும் புள்ளியல், 28ம்தேதி கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வீட்டுமுறை அறிவியல், அரசியல் அறிவியல், 29ம்தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, வேளாண் அறிவியல், 30ம்தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், தொழில்சார் திறன் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகிறது.



Post Top Ad