பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக நிதி ஒதுக்கீடு - SPD Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, August 24, 2021

பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக நிதி ஒதுக்கீடு - SPD Proceedings

 

2021-22 ஆம் கல்வி ஆண்டு - பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ( Safety & Security at School secondary) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் வழிகாட்டுதல் மற்றும் நிதி விடுவித்தல் சார்பு.





ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் அறிக்கை ( PAB Minutes ) இதுவரை பெறப்படாத நிலையில் பார்வையில் காணும் Appraisal Report இல் உள்ளபடி , Quality Component Safety & Security at school level ( Secondary ) என்ற தலைப்பின்கீழ் பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பரிந்துரையில் , 6,177 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு ( Secondary ) பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக பள்ளி ஒன்றுக்கு ரூ .2,000 / - வீதம் மொத்தத் தொகை ரூ . 123.54 இலட்சம் நிதி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 


இதன் உயரிய நோக்கம் , உலக அளவில் கோவிட் -19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான தற்போதைய சூழலில் , மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்துவதும் , மகிழ்வுடனும் , பாதுகாப்பு உணர்வுடனும் , கல்வி கற்கும் சூழலை மாணவர்களிடையே ஏற்படுத்துவதும் ஆகும். தற்போதுள்ள கோவிட் -19 பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக , 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் அனைத்து 6,177 அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மட்டும் , வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் , மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் , பள்ளி வளாகம் , வகுப்பறைகள் மற்றும் மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் கழிவறைகள் போன்றவற்றை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணியின் அவசியம் கருதியும் முதற்கட்டமாக , பள்ளி ஒன்றுக்கு ரூ .1000 / - வீதம் 6,177 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு மொத்தம் ரூ .61,77,000 / - மட்டும் , இணைப்பில் உள்ளவாறு , மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.



வழிகாட்டுதல்கள் :


 மாவட்டங்கள் மேற்கொள்ள வேண்டியவை :


 1. மாநில திட்ட இயக்ககத்திலிருந்து செயல்முறைகள் பெறப்பட்டவுடன் மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து , அரசின் உத்தரவின்படி மற்ற துறைகளிடமிருந்தும் பள்ளிகளுக்கு கிடைக்கும் அனைத்துவித ஆதாரங்களையும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடுதல் வேண்டும்.


2. நிதி பெறப்பட்டவுடன் சார்ந்த பள்ளிகளுக்கு உடனே நிதியை PFMS வாயிலாக விடுவித்துப் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்த தெளிவான மற்றும் மாநில திட்ட இயக்ககத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல் அடங்கிய முதன்மைக் கல்வி அலுவலரின் தனி செயல்முறைகள் ( Proceedings ) பள்ளிகளுக்கு உடனடியாக அனுப்பப்பட வேண்டும்.


3. விடுவிக்கப்பட்ட நிதியினை முறையாக செலவு செய்ய வேண்டும் . அதற்கான பயன்பாட்டுச் சான்றிதழை பள்ளி திறந்த ஒரு வாரத்திற்குள் அனைத்து பள்ளிகளிடமிருந்து பெற்று , மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்பப்பட வேண்டும். 


4. மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப CEO , DEO , BEO , ADPC , APO , EDC , BRTE ஆகியோர் பள்ளிகள் தூய்மை செய்யப்பட்டதை ஆய்வு செய்தல் வேண்டும்.


5. எக்காரணத்தைக் கொண்டும் எந்த ஒரு பள்ளியும் விடுபடக்கூடாது . அனைத்துப் பள்ளிகளும் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் . அதனை CEO உறுதி படுத்துதல் வேண்டும்.


6. மேலும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த புகைப்படங்களுடன் கூடிய தொகுப்பறிக்கையினை MDO வாயிலாக தயாரித்து அனுப்புதல் வேண்டும். ஒவ்வொரு புகைப்படமும் எடுக்கப்பட்ட நேரம் , நாள் , மாதம் மற்றும் பள்ளியின் பெயர் அதில் இடம்பெற வேண்டும்.


பள்ளிகள் மேற்கொள்ள வேண்டியவை ( பள்ளி திறப்பதற்கு முன் ) : 


1. பள்ளிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டவுடன் தலைமை ஆசிரியர்கள் SMC / SMDC உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி பள்ளிகளையும் , வகுப்பறைகளையும் மற்றும் மாணவர்களின் கைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்குத் தேவையான , கொள்முதல் செய்ய வேண்டிய பொருள்கள் எவை என்பதையும் அதன் அளவினையும் முடிவு செய்து தீர்மானம் இயற்ற வேண்டும்.


2. தீர்மானத்தின் அடிப்படையில் பொருள்களை விதிமுறைகளை பின்பற்றிக் கொள்முதல் செய்து அவற்றை பள்ளி இருப்புப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.


3. கொள்முதல் செய்த பொருள்களைக் கொண்டு பள்ளி வளாகம் , வகுப்பறைகள் மற்றும் மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களான கழிவறைகள் போன்றவற்றை , பள்ளிகள் திறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


4. இதற்காக ஒரு பொறுப்பு ஆசிரியரை நியமித்து தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்பார்வையிடச் செய்ய வேண்டும்.


 5. பள்ளி திறப்பதற்கு முன்பு மேற்காண் பணிகள் அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெற்றதை CEO / DEO / BEO / ADPC / APO / EDC / BRTE உள்ளிட்டக் கள அலுவலர்கள் ஆய்வு செய்வர் . 


பள்ளிகள் திறந்த பின் : 


1. பள்ளிகள் திறந்த பிறகு , கோவிட் -19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான சூழலில் , நோய்த் தொற்று பரவாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு , மாணவர்களின் பாதுபாப்பை உறுதிபடுத்த வேண்டும்.


2. கோவிட் -19 குறித்து , அரசின் சுகாதாரத்துறை வாயிலாக வழங்கப்படும் வழிக்காட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.


Click Here To Download - School Reopen Instruction & SPD Proceedings - Pdf




Post Top Ad