Online Training For All HM's, PG, BT, SG Teachers (16.12.2020 to 22.12.2020) - Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, December 15, 2020

Online Training For All HM's, PG, BT, SG Teachers (16.12.2020 to 22.12.2020) - Proceedings



பொருள் : ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - தருமபுரி மாவட்டம் - 2020-21 ஆம் கல்வியாண்டு - பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ( Safety & Security for Elementary and Secondary ) ஆசிரியர்களுக்கு ஒரு நாள் இணையவழி பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல் - சார்பு . 
 
2020-21 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமையரிசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு " பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் ” சார்ந்து பயிற்சி வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அனுமதி வழங்கியுள்ளது . இதன் உயரிய நோக்கம் , உலக அளவில் கோவிட் -19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமாக தற்போதைய சூழலில் , பள்ளி மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதிபடுத்துவதும் , தன்சுத்தத்துடனும் , பாதுகாப்பு உணர்வுடனும் கல்வி கற்கும் சூழலை பள்ளிகளில் ஏற்படுத்துவதும் ஆகும் . இதற்காக அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது . மேற்காண் பயிற்சியினை , இணையதள வாயிலாக கீழ்க்காணும் தலைப்புகளோடு தொடர்புடைய கோவிட் -19 நோய்த்தொற்று பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு வழங்கவும் , பயிற்சி கட்டகமும் வழங்கப்படவுள்ளது


பயிற்சி தலைப்புகள் : 

1. பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் 


2. மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் 


3. மாணவர்களின் உளவியல் சார்ந்த பாதுகாப்பு அம்சங்கள் 


4. மாணவர்களின் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கும் கடமைகளும் . 


இப்பயிற்சியானது இணையதள வழியாக TNTP Portal மூலமாக QR code உடன் கூடிய விழிப்புணர்வு வீடியோக்கள் , ஆசிரியர்களுக்கான Assessment Tool ஆகியவற்றை உள்ளடக்கிவாறு கீழ்க்கண்ட தேதிகளில் 1 நாள் பயிற்சியாக ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது .




பயிற்சி குறித்த ஆசிரியர்களுக்கான வழிகாட்டுல்கள் : 

பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்கள் , தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் , அவர்களது இருப்பிடத்திலிருந்தே எந்த நேரத்திலும் , TNTP Portal மூலமாக அதாவது tntp.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தங்களது Username , Password ஐ Type செய்ய வேண்டும் . ( Recommended Browser- Google Chrome ) , ஆசிரியர்களுக்கான Username , Password ஆனது EMIS Portal > School login Staff details - ல் கிடைக்கும் . ஆசிரியர்கள் தங்களின் பள்ளித் தலைமையாசிரியர்கள் வாயிலாக இதனைத் தெரிந்து கொள்ளலாம் . அதன்பிறகு TPD என்ற Menu- இல் Training Session - ஐ Click செய்து Safety and Security பயிற்சியினை தொடங்க வேண்டும் . பயிற்சியின் போது QR Code உடன் கூடிய விழிப்புணர்வு வீடியோக்கள் , ஆசிரியர்களுக்கான Assessment Tool போன்றவையும் இடம்பெறும் . பயிற்சியில் கலந்து கொண்டபின் Assessment Tool- ல் இடம் பெற்றுள்ள வினாக்களுக்கு ஆசிரியர்கள் விடையளிக்க வேண்டும் . இதிலிருந்து பயிற்சியின் தாக்கம் ஆசிரியர்களை சென்றடைந்த விதம் மதிப்பீடு செய்யப்படும் . இப்பயிற்சியில் ஆசிரியர்கள் Laptop , Computer , Mobile Phone ஆகியவற்றின் வாயிலாகக் கலந்து கொள்ளலாம் . ஆசிரியர்கள் தாங்கள் பெற்ற பயிற்சியினை பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்களிடையே கொண்டு சேர்த்து அவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்துதல் வேண்டும் . . . .பயிற்சியின் தாக்கம் மாணவர்களைச் சென்று சேர்ந்ததை உறுதிப்படுத்த மாணவர்களுக்கான Assessment நடத்துவதற்கு சூழ்நிலைக்கேற்ப உரிய தேதி பின்னர் தெரிவிக்கப்படவுள்ளது . ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட விவரங்கள் மாநிலத்திலிருந்தும் EMIS Portal வழியாகக் கண்காணிக்கப்படும் . • இப்பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களும் தவறாது கலந்து கொள்ளுதல் வேண்டும் . . மேற்பார்வையிடுதல் : அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பயிற்சியில் கலந்து கொள்வதை ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளின் அடிப்படையில் கீழ்க்ாண் அலுவலர்கள் பயிற்சி நடைபெறும் நாட்களில் அவ்வப்போது EMIS Portal வழியாகக் கண்காணிக்க வேண்டும் .  


 
மாவட்டத்திலுள்ள அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் " பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் ” சார்ந்த ஒரு நாள் இணையதள வழியான பயிற்சியில் தவறாது கலந்து கொண்டு பயிற்சியின் தாக்கத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதை அனைத்து அலுவர்கள் உறுதி படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது . 








 






தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்










Post Top Ad