கால் வீக்கத்தால் ரொம்ப அவதிப்படுறீங்களா? அப்ப இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை ட்ரை பண்ணுங்க. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, December 4, 2019

கால் வீக்கத்தால் ரொம்ப அவதிப்படுறீங்களா? அப்ப இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை ட்ரை பண்ணுங்க.






உடலில் தேங்கி இருக்கும் அதிகமான நீர் பல்வேறு பாகங்களில் தேங்கி கடும் அவதியை ஏற்படுத்தும். குறிப்பாக, கைகள், பாதங்கள், கால்கள், கணுக்கால்கள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும். இதனால், வீக்கம் மற்றும் அசௌகரியம் ஏற்படும். இத்தகைய நீர் கோர்வையானது, கர்ப்பம், மருந்து, இதய செயலிழப்பு, சிறுநீரக நோய் அல்லது கல்லீரல் சிரோசிஸ் ஆகியவற்றின் விளைவாக ஏற்படலாம்.


வயிற்று வலி, குமட்டல், வாந்தி, உயர் இரத்த அழுத்தம், மூட்டுகளில் விறைப்பு, பலவீனம், பார்வை அசாதாரணங்கள், வீங்கிய சருமம் போன்ற அறிகுறிகள் நீர்கோர்வையினால் ஏற்படுகிறது.
ஒருவேளை ஒரு குறிப்பிட்ட நோயினால் நீர்கோர்வை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

அப்படி எதுவுமில்லை இல்லாமல், சிறிய அளவிலான நீர்கோர்வையாக இருந்தால் சில வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தியே வீக்கம் மற்றும் அசௌகரியத்தை சரிசெய்திட முடியும். வாருங்கள் அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்...

கால் வீக்கத்தால் ரொம்ப அவதிப்படுறீங்களா? அப்ப இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை ட்ரை பண்ணுங்க.
எப்சம் உப்பு குளியல்
எப்சம் உப்பு அல்லது மக்னீசியம் சல்பேட்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளதால், அவை நீர்கோர்வையால் ஏற்படக்கூடிய வீக்கம் மற்றும் வலி ஏற்படுவதை குறைத்துவிடும்.

ஒரு கப் எப்சம் உப்பை குளியல் நீரில் கலந்து கொள்ளவும். பின்பு, அந்த நீரில் உங்களை கால்களை 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். இதேபோன்று, வீக்கம் குறையும் வரை தொடர்ந்து தினமும் செய்யவும்.


கால் வீக்கத்தால் ரொம்ப அவதிப்படுறீங்களா? அப்ப இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை ட்ரை பண்ணுங்க.
பாதிக்கப்பட்ட பகுதியில் மசாஜ் செய்யலாம்

நீர்கோர்வையால் வீங்கிய பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து விடுபடலாம். வெறும் கைகளை கொண்டு கால்களில் பொறுமையாக மேல்நோக்கி மசாஜ் செய்து, சிறிது அழுத்தத்தை கொடுத்தாலே போதும், கால்களில் தேங்கிய தேவையற்ற நீர் நீங்கி வீக்கமும் படிபடியாக குறையும், கால்களுக்கும் சுகமாக இருக்கும்.


கால் வீக்கத்தால் ரொம்ப அவதிப்படுறீங்களா? அப்ப இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை ட்ரை பண்ணுங்க.
இஞ்சி டீ

இஞ்சியில் உள்ள ஜின்ஜரோல், ஒரு ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு காரணியாக செயல்படுகிறது. தினமும் இஞ்சி டீ குடிப்பதால் நீர்கோர்வையால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து தப்பிக்க உதவும்.

அரை துண்டு இஞ்சியை நசுக்கி, ஒரு கப் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். இந்த டீ மிதமான சூட்டில் இருக்கும் போது குடிக்கவேண்டும்.


கால் வீக்கத்தால் ரொம்ப அவதிப்படுறீங்களா? அப்ப இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை ட்ரை பண்ணுங்க.
தேயிலை எண்ணெய் (Tea tree Oil)

ஆன்டி பாக்டீரியல், ஆன்டி மைக்ரோபியல், ஆன்டி ஃபங்கல், அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி போன்ற பல்வேறு குணங்களை தன்னுள் அடக்கியுள்ள தேயிலை எண்ணெய் நீர்கோர்வைக்கு சிறந்ததோர் மருந்தாகும்.

4 முதல் 5 துளிகள் தேயிலை எண்ணெயை பஞ்சில் தொட்டு, வீக்கம் உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். ஒருவேளை உங்கள் சருமம் மிகவும் மென்மையானது என்றால், தேயிலை எண்ணெயை கேரியர் எண்ணெயுடன் கலந்து உபயோகிக்கலாம். நாள் ஒன்றிற்கு 2 முறை இதனை தொடர்ந்து செய்யலாம்.


கால் வீக்கத்தால் ரொம்ப அவதிப்படுறீங்களா? அப்ப இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை ட்ரை பண்ணுங்க.
மல்லி விதைகள்

கொத்தமல்லி விதைகளில் ஆல்கலாய்டுகள், பிசின்கள், டானின்கள், ஸ்டெரோல்கள் மற்றும் ஃபிளாவோன்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளன. ஒரு ஆய்வின்படி, கொத்தமல்லி விதைகளின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நீர்கோர்வை சிகிச்சைக்கு பெரிதும் உதவும்.

ஒரு கப் நீரை கொதிக்க வைத்து, அதில் 3 கப் மல்லி விதைகளை சேர்க்கவும். நீர் பாதியாக குறையும் வரை நன்கு கொதிக்கவிடவும். பின்பு, அதை வடிகட்டிவிட்டு, தினமும் 2 முறை பருகவும்.


கால் வீக்கத்தால் ரொம்ப அவதிப்படுறீங்களா? அப்ப இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை ட்ரை பண்ணுங்க.
சூடான அல்லது குளிர்ந்த ஒத்தடம்

மிதமான சூடுள்ள நீரை கொண்டு கொடுக்கப்படும் அழுத்தம் வீக்கமுள்ள பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கும். இதன் மூலம், வலி மற்றும் வீக்கம் குறையும். குளிர்ந்த நீரை கொண்டு செய்யும் போது, பாதிக்கப்பட்ட பகுதியில் உணர்ச்சிகளை தூண்டி வீக்கத்தை குறைத்திடும்.

ஒரு சுத்தமான துணியை எடுத்து, மிதமான சூடுள்ள நீரில் நனைத்து, அதனை வீக்கமுள்ள இடத்தை சுற்றி கட்டவும். இப்படியே 5 நிமிடங்கள் விட்டுவிடவும். வீக்கம் குறைவதை பார்க்கலாம்.


கால் வீக்கத்தால் ரொம்ப அவதிப்படுறீங்களா? அப்ப இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை ட்ரை பண்ணுங்க.
கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயில் அல்லில் ஐசோதியோசயனேட் எனப்படும் ஒரு கலவை உள்ளது, இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது நீர்கோர்வையால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவும்.

அரை கப் கடுகு எண்ணெயை மிதமாக சூடு செய்து, வீக்கம் உள்ள இடத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். தினமும் 2 முறை இதை தொடர்ந்து செய்து வரவும்.

Post Top Ad