இனி மாதம் ரூ.25 000 சம்பாதிப்பவர்கள் ரூ.1 கோடி வரை வாங்கலாம்... - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, December 28, 2019

இனி மாதம் ரூ.25 000 சம்பாதிப்பவர்கள் ரூ.1 கோடி வரை வாங்கலாம்...




மாத வருமானம்ரூ.15,000க்கு அதிகமாக பெரும் ஓவ்வொரு ஊழியர்களுக்கும் மாதந்தோறும் வருங்கால வைப்பு நிதி (Employee Provident Fund) எனும் பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது.

இந்த வைப்பு நிதி ஊழியர் வேலையை விட்டு செல்லும் போதோ அல்லதுஒரு சில ஆண்டுகள் கழித்தோ,ஊழியர்களுக்கு ஒரு கணிசமான தொகையாக திரும்பக் கிடைக்கும். இப்படியான இந்த வைப்பு நிதியில் மாதம் ரூ.25,000 வருமானம் பெரும் ஒரு ஊழியர் 25 ஆண்டுகள் கழித்து ரூ.1 கோடி வரையில் இதன் மூலம் திரும்பப் பெற வாய்ப்புள்ளதாக ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

25 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு தனி நபரின் மாத வருமானத்தில் இருந்து 12 சதவீதம், அதாவது 3000 ரூபாய் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படும்.

மேலும் அந்த அலுவலகம் சார்பாக இவரின் கணக்கில் 1250 ரூபாயும் அரசாங்கத்தின் சார்பாக 500 ரூபாயும் சேர்த்து மொத்தம் 1750 ரூபாய் கூட்டுதலாக சேர்க்கப்படும்.

இப்படியாக மாதந்தோறும் 4750 ரூபாய் அந்த ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் சேரும். இந்த தொகை 25 ஆண்டுகளுக்கு அப்படியே அந்த ஊழியர் சேமித்து வந்தால் 8.5 சதவீத வட்டியுடன் சராசரியாக அவரின் கணக்கில் 50 லட்சம் இருக்கும் இது தவிர இந்த வைப்பு நிதியில் ஓய்வூதியம் எனும் பெயரில் ஒரு 50 லட்சமும் சேர்ந்து மொத்தம் 1 கோடியாக இந்த சேமிப்பு அவருக்கு திரும்ப கிடைக்கும் என கூறப்படுகிறது.



Post Top Ad