ஏதாவது வந்திருக்குமோ! தினமும் 150 முறை மாணவர்கள் பதட்டம் - Asiriyar.Net

Post Top Ad


Monday, December 23, 2019

ஏதாவது வந்திருக்குமோ! தினமும் 150 முறை மாணவர்கள் பதட்டம்
கோவை:கல்லுாரி மாணவர்கள் நாள்தோறும், 150 முறைக்கு மேல், தங்களது மொபைல்போன்களை எடுத்து பார்க்கும் பழக்கத்துக்கு, ஆளாகி இருப்பதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஏற்படும் வீண் பதட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, மீட்பு மையங்கள் உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அதிர்ச்சி அளிக்கின்றனர்.

மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து, உ.பி.,அலிகார் பல்கலை சார்பில் நடந்த ஒரு ஆய்வில், கல்லுாரி மாணவ, மாணவிகள் ஒரு நாளைக்கு குறைந்தது, 150 முறை மொபைல்போனை எடுத்து பார்ப்பதாக தெரியவந்துள்ளது.இது, மாணவர்கள் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகி வருவதை உணர்த்துவதாக தெரிவிக்கும் மனநல மருத்துவர்கள், அவர்கள் மத்தியில் உளவியல் ரீதியாக வீண் பதட்டத்தை ஏற்படுத்துவதாக எச்சரிக்கின்றனர்.இது குறித்து, கோவையை சேர்ந்த மனநல மருத்துவர் மோனி கூறியதாவது:நீங்கள் கேட்பது உண்மைதான்.
பல்கலை மற்றும் கல்லுாரிக்கு, 200 மாணவர்கள் என்ற அடிப்படையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 90 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள், ஸ்மார்ட் மொபைல்போன்களை பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.'ஆப்ஸ்' பதிவிறக்கம் செய்து, கம்ப்யூட்டருக்கு மாற்றாக, மொபைல்போன்களை பயன்படுத்துகின்றனர். மாணவர்களில் வெறும், 26 சதவீதம் பேர் தான், மொபைல்போன்களை பேசுவதற்காக பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.மற்ற மாணவர்கள், சமூக வலைதளங்களை பார்க்க, கூகுள் போன்ற தேடுதல் பொறி(சர்ச் இன்ஜின்) தளங்கள் பயன்படுத்த, திரைப்படங்கள் பார்க்கவே, மொபைல்போன் பயன்படுத்துகின்றனர்.இவர்களில், சுமார் 63 சதவீதம் பேர், ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வரை பயன்படுத்துகின்றனர். இதிலும், 23 சதவீத மாணவர்கள், தினமும் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக, மொபைல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.தங்கள் போனுக்கு வரும் எந்த தகவலையும், தவற விடக்கூடாது என்ற பதட்டமே இதற்கு காரணம்.

இதற்காக தினமும் மாணவர்கள், 150க்கும் மேற்பட்ட முறை மொபைல்போன்களை எடுத்து பார்க்கும் பழக்கத்துக்கு, அடிமையாகி உள்ளனர்.இதன் வாயிலாக, மாணவர்களின் கல்வி உட்பட, தினசரி வேலைகளும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இவர்களை மீட்க, விரைவில் மீட்கும் மையங்கள், உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.* சுமார் 63 சதவீதம் பேர், ஒரு நாளைக்கு 7 மணி நேரம் பயன்படுத்துகின்றனர். * 23 சதவீதம் பேர், தினமும் எட்டு மணி நேரத்துக்கும் மேல் பயன்படுத்துகின்றனர்.* 150க்கும் மேற்பட்ட முறை, பதட்டத்துடன் போனை எடுத்து பார்க்கின்றனர்.7 நிமிடத்துக்கு ஒரு முறை!சமீபத்தில் கிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியில், சைபர் குற்ற தடுப்பு விழிப்புணர்வு மாநாடு நடந்தது. இதில், தற்போதுள்ள நிலையில் மாணவர்கள், 7 நிமிடத்துக்கு ஒரு முறை கட்டாயம் மொபைல்போன்களை பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட, 7 நிமிட இடைவெளியில், தங்களுக்கு ஏதேனும் தகவல் வந்திருக்குமோ என்று நினைத்து, பதட்டம் அடைவதாக தெரிவிக்கப்பட்டது. இதுவும் மொபைல்போன் பழக்க அடிமை என்ற நிலையின் கீழ் வருவதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Recommend For You

Post Top Ad