Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, February 19, 2025

பாலியல் புகார் - மன உளைச்சல் - அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மரணம்!





ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராக சேட் ஆயூப்கான் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகளின் பெற்றோர், குழந்தைகள் நல அலுவலகம் மற்றும் காவல்துறைக்கு புகார் அளித்தனர்.




அதன்பேரில், கீழக்கரை அனைத்து மகளிர் போலீசார், வட்டார கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.




இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தலைமை ஆசிரியர் சேட் அயூப்கான் மாரடைப்பால் உயிரிழந்தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தற்போது விசாரணையில் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment

LightBlog