ஆசிரியர்கள் போராட்டம் - பள்ளிகல்வித்துறை கண்காணிப்பு - Asiriyar.Net

Tuesday, February 25, 2025

ஆசிரியர்கள் போராட்டம் - பள்ளிகல்வித்துறை கண்காணிப்பு

 



ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழுவான ஜக்டோ ஜியோ சார்பில் தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது 


இதன் பொருட்டு தமிழக அரசின் சார்பில் நான்கு அமைச்சர்களும் மற்றும் ஜாக்டோ ஜியோ தலைமை நிலைய பொறுப்பாளர்கள் சார்பிலும் முக்கிய கோரிக்கையான தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது குறித்து நேற்று பிப்ரவரி 24ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் பேச்சுவர்த்தை நடைபெற்றது 


பேச்சுவார்த்தையின் முடிவில் அமைச்சர்கள் ஜக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு சுமூக தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டது இதற்கு நான்கு வார கால அவகாசம் தேவை என அறிவிக்கப்பட்டது 


ஜாக்டோ ஜியோவின் போராட்டத்திற்கு உயர்நீதி மன்றமும் தடை விதித்திருந்தது


இதனை அடுத்து இன்று மறியல் போராட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதை விடுத்து ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது


இந்நிலையில் ஆசிரியர்கள் சார்பாக பல்வேறு இடங்களில் இன்று பிப்ரவரி 25ஆம் தேதி ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் அறிவித்துள்ளனர். 


இந்தப் போராட்டத்தின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பள்ளிக்கு செல்லவில்லை. மேலும் சில இடங்களில் ஒரே பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும் தற்செயல் விடுப்பு போராட்டம் மேற்கொண்டு உளளதால் பள்ளிகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளன 


இதனை அடுத்து பள்ளிக்கல்வித்துறை எத்தனை ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் மேற்கொண்டுள்ளனர் அதேபோல் முற்றிலுமாக பள்ளிக்கு  வரவில்லை என்றால் அப்பள்ளிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது 


மேலும் இதனை கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதாகும் பள்ளிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது  





No comments:

Post a Comment

Post Top Ad