Kalanjiyam App மூலம் NHIS E- Card download செய்வது எப்படி? - Asiriyar.Net

Tuesday, February 18, 2025

Kalanjiyam App மூலம் NHIS E- Card download செய்வது எப்படி?

 




களஞ்சியம் செயலியின் மூலம்     NHIS E- Card download செய்து கொள்ளலாம்.


🌎  செயல் முறை விளக்கம் 👇


முதலில் களஞ்சியம் செயலியை open செய்யவும்,


அதில் External Apps ஐ கிளிக் செய்யவும்,


அதன் பிறகு NHIS -ஐ கிளிக் செய்யவும்,


பின்னர் Tamil Nadu NHIS என்ற திரை தெரியும் , தங்களின் போனில் TN-NHIS App install பண்ணி இருந்தால் அதில் Open -ஐ கிளிக் செய்யவும்,


TN-NHIS App install பண்ணவில்லை என்றால் அதை install செய்த பிறகு Open -ஐ கிளிக் செய்யவும் 


பின்னர் TN- NHIS என்ற திரை தெரியும் அதன் இடது பக்க கார்னரில் மூன்று சிறிய கோடுகள் இருக்கும் அதை கிளிக் செய்யவும்,


பின்னர் Login page வரும் அதில் username என்ற கட்டத்தில் தங்களின் PPO number (உ-ம் R0723377) ஐ டைப் செய்யவும்,


Password என்ற கட்டத்தில் தங்களின் பிறந்த நாள் -மாதம்-வருடம் ஆகியவற்றை டைப் செய்யவும் (உ-ம் 01-02-1960)


அதற்கு கீழே உள்ள Login ஐ கிளிக் செய்தவுடன் Logged successfully என்று தோன்றி மறைந்து விடும்.


பின்னர் மீண்டும் TN- NHIS என்ற திரை தெரியும். அதில் தங்களின் பெயர் மற்றும் கார்டு எண் தெரியும்.


அதற்கு கீழே உள்ள Menu வில் E- Card ஐ கிளிக் செய்தவுடன் தங்களின் TN-NHIS Card download ஆகி விடும்.


🌀 Download ஆன Card தங்களின் போன் My file அல்லது File manager ல் download ல் இருக்கும்.


🌀 அதை open செய்து பார்க்கலாம் தேவைப்பட்டால் Computer Centre ல் Print Out எடுத்துக் கொள்ளலாம்.



No comments:

Post a Comment

Post Top Ad