“உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல, இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல. எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல” என தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி தர முடியாது என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய நிலையில் அண்ணாவின் உரையை பதிவிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க,எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்?
மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்?
அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம்.
உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல,
இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல.
எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல.
இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும்” என தெரிவித்துள்ளார்.
அதே உரிமையை தான் நாங்களும் கேட்கிறோம் எங்கள் குழந்தைகள் அரசு பள்ளியில் பயிலும் போது மூன்று மொழிகளை ஏன் கற்க கூடாது❓️❓️❓️
ReplyDelete