புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை
ஆராய்வதற்காக 26.02.2016ல் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்த ஷீலா நாயர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு பின்னர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி எஸ் ஸ்ரீதர் தலைமையில் செயல்பட்டு 27. 11. 2018 இல் அன்றைய தமிழக முதல்வரிடம் அறிக்கையை வழங்கியது. அந்த அறிக்கை கடந்த ஆறு ஆண்டுகளாக பொதுவெளியில் வெளியிடப்படாமல் உள்ளது.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வல்லுநர் குழு அறிக்கையை கேட்டபோது
குழுவின் அறிக்கை பரிசீலனையில் உள்ளதால் தகவல் வழங்க இயலாது என்று தமிழக நிதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment