TETOJAC - ஆசிரியர் இயக்கங்களின் போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, June 9, 2023

TETOJAC - ஆசிரியர் இயக்கங்களின் போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பு

 




தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்)

ஊடகச் செய்தி

டிட்டோஜாக்குடன் பள்ளிக்கல்வித்துறை நடத்திய பேச்சுவார்த்தை

மூன்று கட்டப் போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (டிட்டோஜாக்) மாநில உயர்மட்டக் குழு கடந்த 06.06.2023 அன்று சென்னையில் கூடி, ஆசிரியர்கள் பதவி உயர்வுக்குத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திட வேண்டும், ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறத் தகுதி தேர்வு தேவையில்லை என்பதை தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்டப் போராட்டங்கள் நடத்தத் தீர்மானித்தது.


அத்தீர்மானங்களை 06.06.2023 அன்று மாலையே மதிப்புமிகு.பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் மதிப்புமிகு.தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரிடம் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் நேரில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் டிட்டோஜாக் அமைப்புடன் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த எழுத்து மூலமான அழைப்புத் தரப்பட்டது. 


அதன்படி இன்று (09.06.2023) முற்பகல் 11 மணிக்கு மதிப்புமிகு.பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் தலைமையில், மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் முன்னிலையில் டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 முழு விவரம் 

Click Here to Download - TETOJAC - PRESS RELEASE - Pdf




Post Top Ad