இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை சார்பாக 14-06-2023 அன்று பிற்பகல் 3 மணி அளவில் அரசு நிதித்துறை செயலாளர் தலைமையில் இயக்கப் பொறுப்பாளர்கள் கூட்டம்
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 01.06.2009-க்கு பின் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்கள் 01.06.2009-க்கு முன் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்களுக்கு இணையான ஊதியம் கோரும் கோரிக்கை சார்பாக ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க குழு அமைத்து பார்வை 3-ல் கண்டுள்ளவாறு அரசாணை வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், சம வேலைக்கு சம ஊதியம் குறித்த கோரிக்கை சார்பாக மேற்கண்டுள்ள குழுவின் தலைவர் / அரசு நிதித் துறை செயலாளர் (செலவினம்) அவர்கள் தலைமையில் 14.06.2023 அன்று பின்வருமாறு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் கீழ்குறிப்பிட்ட சங்க பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சங்கத்தின் பெயர்
1. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
2. தமிழக ஆசிரியர் கூட்டணி,
3. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
No comments:
Post a Comment