''ஐ.ஏ.எஸ்., ஆதிக்கம் முடிஞ்சதுன்னு சந்தோஷமா இருக்காங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''பள்ளிக்கல்வி துறையில, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்துல உருவாக்கப்பட்ட கமிஷனர் பணியிடத்தை நிறுத்தி வச்சுட்டு, மறுபடியும் இயக்குனர் பதவியை கொண்டு வந்துட்டாங்களே... ரெண்டு வருஷமா நடந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி நிர்வாகத்தால, அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் இருந்த இடமே தெரியாம போயிட்டாங்க...
''குறிப்பா, மாணவர்கள் விபரங்கள் அடங்கிய, 'எமிஸ்' இணையதளத்தை யார், யாரோ பயன்படுத்த அனுமதிச்சது, ஆசிரியர் கவுன்சிலிங் தேதியை முடிவு செய்ய முடியாம திணறியதுன்னு நிறைய குளறுபடிகள் நடந்துச்சுங்க...
''சமீபத்துல, பள்ளிக்கல்வி இயக்குனரா நியமிக்கப்பட்ட அறிவொளி, தனக்கு மேல கமிஷனர் இருந்தா, நான் அந்தப் பதவிக்கு வரலைன்னு தெளிவாவே சொல்லிட்டாராம்...
''அப்புறம் தான், கமிஷனர் பதவியை ரத்து பண்ணிட்டு, அறிவொளியை நியமிச்சிருக்காங்க... 'இனி, எந்தக் குழப்பமும் இல்லாம நிர்வாகம் நடக்கும்'னு, ஆசிரியர்கள் வட்டாரம் உற்சாகத்துல இருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
No comments:
Post a Comment