நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை: இன்று காலை 11.30 மணிக்கு வெளியீடு - Asiriyar.Net

Monday, August 9, 2021

நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை: இன்று காலை 11.30 மணிக்கு வெளியீடு

 



தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை இன்று  காலை 11:30 மணிக்கு தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். 


தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10 ஆவது தளத்தில் உள்ள கலந்தாய்வு அரங்கில் திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு நடைபெறும் செய்தியாளா் சந்திப்பின் போது, வெள்ளை அறிக்கையை அமைச்சர் வெளியிட உள்ளார். 


நிதித்துறை இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 



கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக் காலத்தில் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகைகள், எந்தெந்த வழிகளில் அவை செலவிடப்பட்டன என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் எனத் தெரிகிறது. 120 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக அது இருக்கும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதுபோல நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் கடுமையான விவாதங்களைக் கிளப்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைய உள்ள நிலையில், நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் வெள்ளை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வெளியிட உள்ளாா்.


இதற்கு முன்பாக, கடந்த 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராக இருந்த சி.பொன்னையன், நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது, நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டாா்.










No comments:

Post a Comment

Post Top Ad