EMIS - Raise Request Option - Important New Instructions - Asiriyar.Net

Thursday, July 8, 2021

EMIS - Raise Request Option - Important New Instructions

 




1.தினந்தோறும் RAISE REQUEST கொடுக்கப்படும் (1-8 மாணவர்கள் மட்டும்) மாணவர்களும் ஆய்வு செய்யப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு மேல் COMMON POOL ற்கு அனுப்பப்படுவர். எனவே தனித்தனியே குழுவிற்கோ , மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கோ கோரிக்கை அனுப்ப தேவை இல்லை. 


2.தினந்தோறும் RAISE REQUEST ற்கு உட்படும் மாணவர்களும் , RAISE REQUEST கொடுக்கும்  பள்ளிகளும் VERIFY செய்யப்பட்ட பின்னரே பிற்பகல் 3 மணிக்கு மேல் COMMON POOL ற்கு அனுப்பப்படுவர். 


3. ஒருசில மாணவர்களும் பள்ளிகளும் நாள்தோறும் மாணவர்களை RAISE REQUEST கொடுத்து மாற்றிக்கொண்டே உள்ளனர். இவை கண்காணிக்கப்பட்டு முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.


4. பிற மாவட்ட(OTHER  DISTRICT) மாணவர்கள் எனில் RAISE REQUEST கொடுத்து பின் உடனடியாக EMIS DISTRICT  என்ற வாட்சப் குழுவில் தகவல் தெரிவிக்கவும். 


5. ஏற்கனவே EMIS எண் உள்ள மாணவர்களின் *EMIS எண்* எடுப்பதில் சிக்கல் இருப்பின் ஒன்றிய அல்லது மாவட்ட ஒருங்கிணைப்பாளரை தொடர்புகொள்ளவும். 


6. LKG , UKG , முதல் வகுப்பு ஆகிய மூன்று வகுப்புகளை தவிர பிற வகுப்புகளில்  புதிய பதிவு (New creation) செய்யும் போது  மாணவர்களின் பெயர் , நமது பள்ளியின் பெயர் பட்டியலில் காட்டாது. இந்த மாணவர்களுக்கு ஏற்கனவே PROFILE உள்ளதா என மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உடனடியாக ஆய்வு செய்து அப்டேட் செய்வார். இது சம்மந்தமாக  EMIS VELLORE  என்ற வாட்சப் தகவல் தெரிவிக்கவும்


7. RAISE REQUEST கொடுக்கப்பட்ட 8 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் COMMON POOL ற்கு அனுப்பப்படவில்லை. 9 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் புதிய பள்ளிக்கு சென்றுவிட்டால் பழைய பள்ளியில் மாற்று சான்றிதழ் தர இயலாது என்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 



Post Top Ad